கடலோரத்தில் புதிய தாமிர உருக்காலை அமைக்க வேதாந்தா நிறுவனம் திட்டம்
நாட்டின் கடலோரப் பகுதியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய தாமிர உருக்காலை அமைக்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஆலை மூடப்பட்ட நிலையில், நாட்டின் தாமிரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டன் தாமிரம் தயாரிக்கப்படும் என்றும், இதற்காக துறைமுகத்தின் அருகில் ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும், விருப்பமுள்ள மாநிலங்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments