மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் விமானத் தாக்குதல்: குழந்தைகள் கொல்லப்படுவதாகத் தகவல்

0 4168
மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் விமானத் தாக்குதல்

மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான உதவிக் குழு தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்புக்கும், ராணுவத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மியான்மரின் தென்கிழக்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வயது சிறுவனும், 12 வயது சிறுமியும் கொல்லப்பட்டதாக மனிதாபிமான உதவிக் குழு தெரிவித்துள்ளது. குண்டு வீச்சில் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டதாகவும், தொடர் தாக்குதல் காரணமாக மக்கள் காடுகளில் தஞ்சமடைவதாகவும் அந்தக் குழு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments