ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம்..! ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவு

0 3107
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம்..! ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவு

தார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித் துறை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும், வருமான வரி இணையதளத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக பலர் தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பரவலால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டும் நீட்டிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியும் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments