சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிப்பு
சமையல் எரிவாயு சிலண்டர் விலை 10 ரூபாய் குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 125 ரூபாய் உயர்த்தப்பட்டது.
தற்போது சமையல் எரிவாயு சிலண்டர் விலை 10 ரூபாய் குறைந்து 809 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதிலிருந்து, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வந்தன.
Comments