மருத்துவ முகாம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி ?

0 2168
மருத்துவ முகாம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி ?

சென்னை துறைமுகம் தொகுதியில், மருத்துவ முகாம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக 8 பேரை பிடித்து திமுகவினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பி.ஆர். கார்டன் குடிசை பகுதியில் மெட்ராஸ் டயாபெடிஸ் ரிசர்ச் செண்டர் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு வந்த மக்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அவர்களது வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை கேட்டதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த திமுகவினர், இந்த விவகாரம் குறித்து முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மருத்துவ முகாமுக்கு பயன்படுத்திய வாகனம், மற்றும் மருத்துவ முகாமில் இருந்த நபர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments