"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
வரி ஏய்ப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு : டிக்டாக்கின் வங்கிக் கணக்குகளை முடக்கியது இந்திய அரசு
வரி ஏய்ப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து சீன செயலி டிக்டாக்கின் உரிமையாளரான பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
இந்திய-சீன எல்லைப் பிரச்சனை வெடித்ததை தொடர்ந்து டிக்டாக் செயலியை மத்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது.
அதனால் அந்த நிறுவனம் ஆட்குறைப்பு செய்தாலும், இப்போதும் சுமார் 1300 ஊழியர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் இங்கிருந்தவாறு அயல் நாடுகளில் டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பைட்டான்ஸ் நிறுவனம் ஆன்லைன் விளம்பர வருவாயில் வரி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து இந்த மாதம் இரண்டு வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கினர். இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பைட்டான்ஸ் மனு தாக்கல் செய்துள்ளது.
Comments