புதுச்சேரியில் அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் சோதனை

0 1822

புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரில் அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான புவனேஸ்வரன் வீட்டில் நேற்று முதல் நடந்த ரெய்டில், எந்த ஒரு ஆவணமோ, ரொக்கமோ சிக்கவில்லை என கூறப்படுகிறது. காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன் வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, மேலும் சில காங்கிரஸ், என் ஆர் காங்கிரஸ், திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments