அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 3113
அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வாகனத்தை சோதனை செய்த பறக்கும் படை குழு தலைவர் மாரிமுத்தை, அவர் ஒருமையில் பேசி மிரட்டியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததை அடுத்து, மனுதாரரான அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments