ஹரிதுவாரில் கும்ப மேளா தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள ஆசிரமத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

0 2317
ஹரிதுவாரில் கும்ப மேளா தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள ஆசிரமத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

த்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் கும்ப மேளா தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள ஆசிரமத்தில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பல லட்சம் பேர் திரளக் கூடிய மிகப் பிரம்மாண்டமான இந்து திருவிழாவான கும்பமேளா நாளை முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து போலீசார் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர், நகருக்குள் வரும் ஒவ்வொரு வாயிலிலும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

பக்தர்கள் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.

பல லட்சம் முக்கவசங்களை இலவசமாக விநியோகிக்கவும், சானிட்டைசர்கள் போன்றவற்றை வழங்கவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments