கொரோனா பரவல் மிக மோசமானதாக மாறிக் கொண்டு வருகிறது.. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மோசமானதில் இருந்து மிக மோசமானதாக மாறிக் கொண்டு இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிக தீவிரமான செயல்பாட்டில் இருப்பதாக கூறினார். கொரோனா பரவலால் சில மாவட்டங்களில், கடுமையான சூழலை எதிர்கொண்டு இருப்பதாகவும், ஒட்டு மொத்த நாடும் ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து முகக் கவசம் அணிவது 70 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாக கூறிய அவர், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, மனித உயிர்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று வி.கே.பால் வலியுறுத்தினார்.
Comments