தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆர்டி பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த தமிழக அரசு முடிவு

0 2233
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஆர்டி பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஆர்டி பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்திய பின் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நோய் தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

இதற்கு முன் இயங்கி வந்த கோவிட் மையங்களை முழுமையாக மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments