தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு : டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூடக் கோரி வழக்கு
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில், கடந்த பிப்ரவரிக்கு பின் வைரஸ் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். த
மிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments