வாக்குப்பதிவு முடிந்தவுடன் கொரோனா பரவலைத் தடுக்கத் தீவிரத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர்
கொரோனா தொற்று அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை ரிப்பன் மாளிகையில் மிகப்பெரிய பலூனை ஆணையர் பிரகாஷ் பறக்கவிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு முடிந்தவுடன் கொரோனா பரவலைத் தடுக்கத் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments