கொரோனா தடுப்பூசி பற்றி வரும் வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் - சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

0 1699
இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானதும், செயல்திறன் மிக்கதும் ஆகும் என்பதால் அவை குறித்து வாட்ஸ்ஆப்பில் வெளியாகும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லி இருதயம் மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அமைச்சரும் அவரது மனைவியும் போட்டுக் கொண்டனர்.

அதன் பின் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஹர்ஷ் வர்தன்,ஆபூர்வமாக சிலருக்கு தடுப்பூசி பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறினார்.

தடுப்பூசி போட்ட பிறகு தொற்று பாசடிவ் ஆக வந்தாலும், ஐசியூ வில் சேரும் அளவுக்கு பாதிப்பு அதிகமாக இருக்காது என்று அவர் கூறினார். மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் சோதனைகட்டத்தில் இருப்பதாகவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments