பெண் பத்திரிக்கையாளர் குறித்து தரக்குறைவாக முகநூலில் பதிவிட்டதாக வழக்கு.. எஸ்.வி.சேகர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் தடை

0 2383
பெண் பத்திரிகையாளர் குறித்து முகநூலில் அவதூறு கருத்தை பகிர்ந்த புகாரில், நடிகர் எஸ்.வி.சேகர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர் குறித்து முகநூலில் அவதூறு கருத்தை பகிர்ந்த புகாரில், நடிகர் எஸ்.வி.சேகர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பான வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் எஸ்.வி.சேகர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்ய தடைவிதித்தும், வழக்கில் அவர் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments