”அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்” :சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றாழ்த்த பகுதியாகவும் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த பகுதியிலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வரும் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் குமரிக்கடல்,மன்னர் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே இருபகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments