ஆறுநாள் போராட்டத்திற்குப் பின் எவர்கிவன் கப்பல் மீட்பு: இயல்பு நிலைக்குத் திரும்பும் சூயஸ் கால்வாய்

0 6605

சூயஸ் கால்வாயில் மணலில் சிக்கியிருந்த மிகப்பெரிய சரக்குக் கப்பல் மீட்கப்பட்டதையடுத்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

 எவர்கிவன் கப்பல் கடந்த செவ்வாயன்று செங்கடல் மத்தியத் தரைக்கடல் இடையே சூயஸ் கால்வாயில் செல்லும்போது பலத்த காற்று வீசியதால் மணலில் தரைதட்டிக் குறுக்காக நின்றது. இதனால் சரக்குப்பெட்டகங்கள், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஏற்றி வந்த 369 கப்பல்கள் செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. உலகின் கப்பல் போக்குவரத்தில் 15 விழுக்காடு சூயஸ் கால்வாயின் வழியே நடைபெறும் என்பதால் ஒரு நாளைக்கு நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

நெதர்லாந்தைச் சேர்ந்த சுமித் சால்வேஜ் என்னும் நிறுவனம் கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. முப்பதாயிரம் கனமீட்டர் மணலை அள்ளியபின், இழுவைக் கப்பல்களின் உதவியுடன் உயர்ஓதத்தில் நேற்றுக் கால்வாயின் நீர்மட்டம் உயர்ந்தபோது எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டது. அதன்பின் அகன்ற நீர்ப்பரப்புள்ள பிட்டர்லேக் என்னுமிடத்துக்குச் சென்றது. இதையடுத்து இருவழிகளிலும் வரிசையாகக் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களின் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments