இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகும் செல்லும்

0 2530

இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஓரியன்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும் இணைக்கப்பட்டன. மேலும் அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன.

இதனால் இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் வரும் ஒன்றாம் தேதி முதல் செல்லாது என தகவல்கள் பரவின. இது குறித்து வங்கிகள் தரப்பில், புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளும் படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருவதாகவும்,  பழைய காசோலைகள் நிறுத்தப்படாது எனவும் அதற்கு அவகாசம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments