மெஹபூபா முப்திக்கு பாஸ்போர்ட் வழங்க ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தேசத்தின் பாதுகாப்பு காரணங்களால் மெஹ்பூபா முப்தியின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் அலுவலகம் எழுதிய கடிதத்தை மிகுந்த எரிச்சலுடன் மெஹ்பூபா தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சிஐடி போலீசாரின் அறிக்கையில் இந்தியாவுக்கு ஆபத்தாக விளங்கக் கூடிய மெஹ்பூபாவுக்கு பாஸ்போர்ட் வழங்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது தாம் தேசவிரோதமானவர் என்று தெரியவில்லையா என்று மெஹ்பூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments