மியான்மர் எல்லைத் தாண்டி வருவோருக்கு அகதிகள் முகாம்கள் அமைக்கக் கூடாது: மணிப்பூர் அரசு உத்தரவு
மியான்மர் எல்லையைத் தாண்டி வருவோருக்கு அகதிகள் முகாமை அமைக்க வேண்டாம் என்று மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
தேவையானால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யலாம் என்றும் அதிகாரிகளுக்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. உணவும் அடைக்கலமும் நாடிவரும் அகதிகளை கனிவாகப் பேசி திருப்பி அனுப்பும்படியும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த அரசு நிர்வாகமும் தொண்டு நிறுவனமும் அங்கு அகதிகளுக்கான முகாமை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசின் நிலைப்பாடு இதுவாக இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளாய் வருவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Comments