வவ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதருக்கு கொரோனா பரவியது; ஊகான் ஆய்வுக்கூடத்திலிருந்து பரவவில்லை: WHO தகவல்

0 11949
வவ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதருக்கு கொரோனா பரவியது; ஊகான் ஆய்வுக்கூடத்திலிருந்து பரவவில்லை: WHO தகவல்

வ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் ஊகான் மாகாணத்தில் ஆய்வுக் கூடத்தில் நிகழ்ந்த தவறால் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்ட நிலையில் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என்று கூறப்படுகிறது.

சீனாவில் நிபுணர் குழு நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும் சில பகுதிகள் அதிகாரிகள் மூலமாக கசிந்துள்ளன.

கொரோனா பரவலுக்கு நான்கு முக்கியக் காரணங்கள் கூறப்பட்டுள்ளன. வவ்வாலில் இருந்து மற்ற விலங்குகளுக்குப் பரவி மனிதர்களுக்குப் பரவியதாக அதில் கூறப்பட்டுள்ளது. மற்ற மூன்று வழிகள் சாத்தியமானவை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments