இயற்கைப் பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியது அ.தி.மு.க. அரசு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
இயற்கை பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை செய்து பொதுமக்களைக் காப்பாற்ற அதிமுக அரசு தவறி விட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் முன்பாக ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இயற்கைப் பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தவறி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் அறிக்கையை முதன்முதலில் தயாரித்து வழங்கியது திமுக தான் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், கொரோனா தொற்று காலத்தில் நலிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க எளிய தவணை முறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
கொரோனா 2வது அலை வருவதால் அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
Comments