வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு : சின்னசேலம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு 4 ஆண்டு சிறை

0 4658

ருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்,சின்னசேலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை சின்னசேலம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் பரமசிவம். இவர், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments