சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலை மீட்க வழிமுறைகள் - வைரலாகும் மீம்ஸ்.!
சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைத்தட்டிய கப்பலை மீட்க ஒருவாரக் காலமாக போராடிய நிலையில் சிலர் கப்பல் மீட்பதற்கு எளிய வழிமுறைகள் இதோ என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சர்வதேச வர்த்தகத்தில் முக்கியமான ஒரு நீர்வழிப் பாதையாக கருதப்படும் சூயஸ் கால்வாயை அடைத்துக்கொண்டு ராட்சத கப்பல் ஒன்று தரைத்தட்டி நின்றது. தைவான் நாட்டின் எவர் கிரீன் மரைன் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல் 20000 கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாயின் வழியாக சென்றது. அப்பொழுது ஏற்பட்ட பலத்த காற்றுக் காரணமாக 400 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பல் சூயஸ் கால்வாயின் குறுக்காக தரைத்தட்டியது.
இதனால் சூயஸ் கால்வாய் மார்க்கத்தில் செல்லும் கப்பல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. நூற்றுக்கணக்கான கப்பல்கள் சூயஸ் கால்வாயில் நின்றதால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றி செல்லப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியதால் கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்பட்டது.
இதனிடையே தரைதட்டி நிற்கும் கப்பல் விடுவிக்கும் பணியில் கடல்சார் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளும் 'இன்ச்கேப்' நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இழுவைப் படகுகள் மற்றும் அகழ்வுக் கருவிகளை கொண்டு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலை மீட்க நெட்டின்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஜெ.மொடோகி என்பவரின் டிவிட்டர் பதிவில் சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி நிற்கும் கப்பல் மீது சாய்தளம் அமைத்து அதன் மேல் ஏறி சிறிய கப்பல் செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Problem solved#SuezCanal pic.twitter.com/nTqpbRs3pS
ThomasWoodenRailway என்ற டிவிட்டர் பதிவில் கால்வாயின் இருப்புறமும் உள்ள தடுப்பு சுவரை ஜேசிபி வாகனங்களை கொண்டு அகற்றி எவர் கிவன் கப்பலை மீட்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Topical references sure are fun. #SuezCanal pic.twitter.com/OLo0BxZ65g
இவர்களை காட்டிலும் மற்றொருவரின் டிவிட்டர் பதிவில் தரைத்தட்டி நிற்கும் கப்பலின் ஒருமுனையில் உள்ள கரைப்பகுதி மணலை நாய் ஒன்று தனது கைகளால் தோண்டி எடுக்கும் புகைப்படம் வைரலாக்கப்படுகிறது. இன்னொருவரின் டிவிட்டர் பதிவில் கரப்பான்பூச்சியை கொள்ளும் ஹிட் போன்று இருக்கும் இரு பாட்டில்களில் நீண்டு இருக்கும் குச்சி போன்ற அமைப்பை கொண்டு கப்பலை நகர்த்தலாம் என கூறப்பட்டுள்ளது.
Having failed miserably with the cat, they’ve now decided to give the dog a go! #Suez #SuezCrisis #SuezBlocked #SuezCanal #EverGreen #EverGiven pic.twitter.com/6krmFdXScW
Solution to every problem#suezcanal #SuezCrisis pic.twitter.com/ZMAEP3t9vT
வேறொரு டிவிட்டர் பதிவில் சூயஸ் கால்வாய் கப்பல் எப்படி தரைத்தட்டி இருக்கும் என்ற அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
I received this animated illustration from a friend who lives in Singapore. He is an accountant & has a few maritime clients
Shared the video with my brother, who was a mariner, & asked him to provide his analysis of what happened with the #EverGiven in the #SuezCanal 1/n pic.twitter.com/0Sp8OZGOte
சிலர் எவர் கிவன் கப்பல் மீது நின்றுக் கொண்டு காட்சில்லாவும், காங்கும் சண்டையிடும் காட்சியையும், கலர் கலர் பலூன்கள் எவர் கிவன் கப்பலில் இருந்து பறக்கும் புகைப்படத்தையும் மீம்ஸாக வைரலாக்கி வருகின்றனர்.
What is happing in #SuezCanal today explained.#Egypt
pic.twitter.com/T06bFDGQ7q
மற்றொருவரின் டிவிட்டர் பக்கத்தில் இருப்பக்கமும் இடிபாடுகளில் சிக்கியப்படி உள்ள எவர் கிவன் கப்பலில் அமர்ந்தபடி அதனை முன்னும் பின்னுமாக ஒருவர் இயக்க முயற்சிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
Comments