தமிழகத்தில் இதுவரை 89,185 தபால் வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு தகவல்

0 1786

சட்டசபை தேர்தலில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.: :

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபாட் எந்திரங்களும்,1 லட்சத்து 16 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன என்றார்.

வாக்குப்பதிவு தடைபடாமல் நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் இதுவரையில் 319 கோடி ரூபாய் மதிப்புடைய பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments