குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை: மு.க.ஸ்டாலின்

0 3078
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்த பின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை, அணைக்கட்டு, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரம் என்பதால் அதிமுக கூட்டணியினர் ஏதேதோ வேஷம் போடுவதாக குற்றம் சாட்டினார். சிறுபான்மையினர் மீது மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் போல நடிப்பதாக அவர் புகார் கூறினார்.

இந்த பிரசாரத்தின் போது அவர், ஜோலார்பேட்டை வேட்பாளர் தேவராஜ், வாணியம்பாடி வேட்பாளர் முகமது நயீம், ஆம்பூர் வேட்பாளர் வில்வநாதன், திருப்பத்தூர் வேட்பாளர்நல்லதம்பி ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.

அணைக்கட்டு வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார், காட்பாடி வேட்பாளர் துரை முருகன், வேலூர் வேட்பாளர் கார்த்திகேயன், கே.வி.குப்பம் வேட்பாளர் சீத்தாராமன், குடியாத்தம் வேட்பாளர் வி.அமலு ஆகியோருக்காக ஸ்டாலின் பிரசாரம் செய்தார். ராணிப்பேட்டை வேட்பாளர் ஆர். காந்தி, அரக்கோணம் வேட்பாளர் கௌதம சன்னா, சோளிங்கர் வேட்பாளர் முனி ரத்னம், ஆர்க்காடு வேட்பாளர் ஈஸ்வரப்பன் ஆகியோருக்கு ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments