கரூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

0 2289
கரூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

கரூர் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான ராஜேஷ் கண்ணன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் அலங்காரத்துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் ராஜேஷ் கண்ணன், கரூர் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கரூர் சட்டமன்றத் தொகுதியில் குப்பைத் தொட்டி சின்னத்தில் சுயேட்சையாக களமிறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் காமராஜபுரம் மேற்கு பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 10 மணியளில் தொடங்கிய சோதனை பல மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments