பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

0 2567

திமுக பிரச்சாரக் கூட்டத்தில் தகராறு செய்ததாக பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளரும், துணை சபா நாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒக்கிலிபாளையத்தில் நேற்று நடந்த திமுகவின் பிரச்சார கூட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் தனது நண்பர்களுடன் சென்று தகராறு செய்ததாகவும்,தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி பார்த்தசாரதியை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பார்த்தசாரதி வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்த நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல், தகாத வார்த்தையில் பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments