செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!

0 15283
உத்திரபிரதேசத்தில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

 உத்திரபிரதேசத்தில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செல்போனுடனே சிலர் பொழுதை கழித்து வருகின்றனர். செல்போனில் பேட்டரி இல்லையென்ற போதிலும் சார்ஜ் செய்து கொண்டே பேசும்போது செல்போன் வெடித்தோ அல்லது சார்ஜர் வெடித்தோ சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்பொழுது உத்திரப்பிரதேசத்திலும் நடந்துள்ளது.

உத்திரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் வசித்து வந்த 12 வயது சிறுவனான மோனு செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆறாவது வகுப்பு படிக்கும் மோனு ஜடூ (jadoo) என்ற சார்ஜர் மூலம் தனது செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் செய்துள்ளான். ஒரு மணி நேரம் கடந்த பின்பு செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் ஆகிவிட்டதா என்பதை பார்ப்பதற்காக ஜடூ சார்ஜரை அந்த சிறுவன் தொட்டுள்ளான்.

அப்பொழுது சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியதில் சிறுவனின் முகம் கிழிந்து ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு சிறுவனின் அறைக்கு வந்த உறவினர்கள் பார்த்தபொழுது முகம் முழுவதிலும் ரத்தம் உறைய சிறுவன் மயங்கி கிடந்துள்ளான். உடனடியாக அவனை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி செல்ல அவன் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மோனுவின் உடலை உறவினர்கள் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று 2019ம் ஆண்டு செல்போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தூங்கிபோது அது வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments