தென் கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இதன் காரணமாக 3 நாட்களுக்கு அந்த பகுதிகளில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நெல்லை குமரி, தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை முதல் வரும் 2 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட கால நிலையே நிலவும். வரும் 2 ஆம் தேதி முதல் வட-மத்திய மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி கூடுதலாக இருக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும்.
Comments