இந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் தலைமையேற்க வேண்டும்: சேலம் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தமிழகம் போல் இந்திய அளவில் பலமான கூட்டணியை அமைக்கத் தலைமையேற்ற வேண்டும் என என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், இந்த தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக கருதாமல், இழந்த மாநில உரிமைகளை, சுயமரியாதையை மீட்டெடுக்குகின்ற, தமிழகத்தை காப்பாற்றுகிற தேர்தலாக கருத வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இயற்கை பேரிடர்களின் போது தமிழகம் கேட்ட நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று கூறிய ஸ்டாலின், ஜி.எஸ்.டி நிலுவை தொகை, கொரோனா நிவாரண தொகை போன்றவற்றை முழுமையாக வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழகம் போல் அகில இந்திய அளவில் பலமான கூட்டணியை அமைக்க ராகுல்காந்தி தலைமையேற்ற வேண்டும் மு.க. ஸ்டாலின வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி ஆகியவற்றால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தது பற்றியோ, மூன்று வேளாண்மை சட்டங்களுக்கு எதிராகவோ தமிழக முதலமைச்சர் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்று குறிப்பிட்டார்.
Comments