"தமிழர்களின் மனதில் இடம் பிடிக்க மரியாதையும், அன்பும் மட்டுமே போதுமானது" -ராகுல் காந்தி

0 3451
"தமிழர்களின் மனதில் இடம் பிடிக்க மரியாதையும், அன்பும் மட்டுமே போதுமானது" -ராகுல் காந்தி

ற்றைச் சிந்தனைக்குள் இந்தியாவை அடக்கி விட முடியாது என்ற ராகுல் காந்தி, அனைத்து மாநில மொழிகள், கலாச்சாரம், சித்தாத்தாங்கள் இணைந்தது தான் இந்தியா எனத் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, நாட்டின் உற்பத்தி தலைநகராக தமிழகம் இருப்பதாக புகழாரம் சூட்டியதோடு, தமிழகத்தை மதிக்காமல் இந்தியா இருந்துவிட முடியாது என்றார்.

தமிழக மக்கள் மிகவும் எளிமையானவர்கள் என்ற ராகுல் காந்தி, தன்னுடைய பாட்டி காலத்தில் தொடங்கி தமிழக மக்கள் தங்கள் மீது அன்பும், அக்கறையும் செலுத்தி வருவதாக உணர்ச்சி பொங்க கூறினார். தமிழர்களின் மனதில் இடம் பிடிக்க மரியாதையும் அன்பும் மட்டுமே போதுமானது எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments