திருச்சியில் காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா விவகாரம் : சிபிசிஐடி விசாரணை
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் கே.என்.நேருவும், அதிமுக சார்பில் பத்மநாதனும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் காவலர்களுக்கு தலா 2ஆயிரம் ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அனைத்து காவல் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், தில்லை நகர் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலையங்களில் 50ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, தில்லை நகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார், உட்பட 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
திமுக சார்பில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள அதிமுகவினர், கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அதே சமயம், இந்த விவகாரத்தில், தன்னை சம்பந்தபடுத்தி சிலர் விஷமத்தனமான கருத்துகளை பரப்புவதாக திமுக வேட்பாளர் கே.என்.நேரு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Comments