அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் 2வது நாளாக நடைபெற்ற சோதனையில் மேலும் ரூ. 3 கோடி பறிமுதல்

0 2976

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் 2வது நாளாக நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத மேலும் ஒரு 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளங்கோவனுக்குச் சொந்தமான பள்ளிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள சிட்பண்ட் நிறுவனத்தில் கணக்கில் வராத 6 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக நடந்த சோதனையில் கணக்கில் வராத மேலும் 3 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments