புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது, நீட் தேர்வு ரத்து, புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது உள்ளிட்டவைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், அனைத்து வீடுகளுக்கும் கட்டணமில்லா குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
Comments