வெனிசூலா அதிபரின் முகநூல் பக்கம் முடக்கம்..! கொரோனா குறித்த தவறான தகவலை பரப்பியதால் நடவடிக்கை
கொரோனா குறித்த தவறான தகவலை வெளியிட்டார் என்பதற்காக வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் முகநூல் பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது.
துளசி செடி ஒன்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்வாடிவிர் (Carvativir) என்ற வாய்வழி மருந்தால் கொரோனாவை அழித்து விடலாம் என நிக்கோலஸ் மதுரோ தமது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டார்.
இதற்கு மருத்துவ ரீதியான எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. இந்த தகவல் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ பரிந்துரைகளுக்கு எதிரானது என்பதால் அதிபரின் முகநூல் பக்கத்தை ஒரு மாத காலத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது.
Comments