தேர்தல் நேரத்தில் அவதூறு பிரச்சாரம் - முதலமைச்சர் குற்றச்சாட்டு..!

0 4221

தமிழகத்தில் சாதி, மதச் சண்டைகள் கிடையாது என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரத்தில் திமுகவினர் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆண்டிப்பட்டி, போடி நாயக்கனூர், கம்பம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக தமிழக முதல்வரை, துணை முதல்வர் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும், 100 நட்களில் பொதுமக்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு புகழாரம் சூட்டினார்.

சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக அரசு அரணாக இருப்பதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லா அரிசி வழங்கியதையும், ஹஜ் யாத்திரை செல்வோருக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கியதையும் நினைவு கூர்ந்தார்.

தமிழகத்தில் சாதி,மத சண்டைகள் கிடையாது என்றும், ஆனால் தேர்தல் நேரங்களில் அவதூறு பிரச்சாரத்தை திமுக செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments