உடல் நலக்குறைவு கணவருக்காக பிரச்சார களத்தில் குதித்த மனைவி..! கொரோனா தடுப்பூசியால் தடை

0 8167
உடல் நலக்குறைவு கணவருக்காக பிரச்சார களத்தில் குதித்த மனைவி..! கொரோனா தடுப்பூசியால் தடை

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அவரது மனைவி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக துரை கி. சரவணன் எம்.எல்.ஏ களமிறக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட துரை கி சரவணன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவரது மனைவி மனைவி நந்தினி தேவி, தனது கணவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளார்

அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கிய நந்தினி தேவி, புவனகிரி பேரூராட்சியில் உள்ள 16 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தார்.

அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் செய்வார்கள் ? என்பதை விளக்கிக் கூறி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிய அவருடன் திமுக மகளிரணியினர் பெருமளவில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments