கொரோனா தொற்று அதிகரித்தாலும், டெல்லியில் ஊரடங்கு எதையும் கொண்டுவரும் எண்ணம் இல்லை: அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின்
கொரோனா தொற்று அதிகரித்தாலும், டெல்லியில் ஊரடங்கு எதையும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இனிமேல் டெல்லி மக்கள் எந்த வித முன்பதிவும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான டெல்லி அரசின் செயல்திட்டத்தை விளக்கிய அவர், தற்போது தினமும் 85 ஆயிரம் முதல் 90 ஆயிரம் கொரோனா சோதனைகளை நடத்துவதாக தெரிவித்தார்.
கொரோனா அதிகரிப்பை சமாளிக்க மருத்துவ ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக கூறிய அவர், 20 சதவிகித படுக்கைகளில் நோயாளிகள் உள்ள நிலையில் 80 சதவிகித படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments