முதல் தகவல் அறிக்கையை உடனே இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1821
முதல் தகவல் அறிக்கையை உடனே இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முதல் தகவல் அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் துறையில் சிபிசிஐடி மற்றும் சைபர் குற்றப் பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என மனு தாக்கல் செய்யப்படது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? என விரிவான பதிலை தாக்க செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments