யமுனை நதிக்கரையில் குதூகலமான ஹோலிப் பண்டிகை..! கோகுலத்தில் களை கட்டியது வண்ணமயமான திருவிழா
நாடு முழுவதும் நாளை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒருவாரகாலமாகவே இதற்கான ஏற்பாடுகள்களை கட்டியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணன் பாலகனாக ஓடி விளையாடிய கோகுலத்தில் ஹோலிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வண்ணங்களை வாரியிறைத்து கண்ணனின் ஆசி பெற மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
யமுனை நதிக்கரையில் கண்ணனுடன் ஹோலி கொண்டாடிய கோகுலத்தின் சிறுவர் சிறுமியர்கள் பாலகிருஷ்ணன் மீது வண்ணங்களை இறைக்கும் காட்சி அங்கு அரங்கேற்றப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் ஆடல் பாடல் என வழிபாடுகள் நடைபெற்றன.
Comments