ஏப். 1 முதல் ஏசி, பிரிட்ஜ், ஸ்மார்ட் செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயருகிறது?
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து கார், பைக், ஏசி. பிரிட்ஜ், ஸ்மார்ட் செல்போன்கள், உள்ளிட்ட பொருட்களின் விலை 3 அல்லது 4 ஆயிரம் ரூபாய் வரை உயருகிறது.
உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்திருப்பதால் விலை உயர இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஏப்ரல் மாதம் தொடங்கியதும் பல பொருட்களின் விலை உயர்வது தவிர்க்கமுடியாததாகிறது.
விமானக் கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளன. பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மின் கட்டணும் உயரும் என்று கூறப்படுகிறது.
Comments