ஆதார் விவரங்கள் வெளியான தகவலுக்கு தனித்துவ அடையாள ஆணையம் மறுப்பு..! ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்ள தடை இருப்பதாகவும் விளக்கம்

0 2463
ஆதார் விவரங்கள் வெளியான தகவலுக்கு தனித்துவ அடையாள ஆணையம் மறுப்பு..! ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்ள தடை இருப்பதாகவும் விளக்கம்

தார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தனித்துவ அடையாள ஆணையம் உடாய் விளக்கம் அளித்துள்ளது.

ஆதாரின் நோக்கம் சரிபார்க்கக்கூடிய அடையாளத்தை வழங்குவதாகும், இது திறமையான, UIDAIஆல் சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஆதார் எண்கள் அங்கீகாரத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் விவரங்கள் பற்றிய எந்த தகவலையும் சேமிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆதார் தகவல்கள் பகிரப்பட்டனவா என்று விசாரணை நடத்துமாறு தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் பாஜகவிடம் ஆதார் பட்டியல் விவரங்கள் கிடைத்தது தொடர்பாக பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆதார் மூலம் திரட்டிய தொலைபேசி எண்களுக்கு மொத்தமாக குறுஞ்செய்தி மூலம் பிரச்சாரம் செய்துவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments