அமெரிக்கா காணொலி வாயிலாக நடத்தும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு

0 2104
அமெரிக்கா காணொலி வாயிலாக நடத்தும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு

மெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதி நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டிற்கு அதிபர் ஜோ பைடன் தலைமை வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பாகும். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் சீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments