இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

0 4311
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

புனேவில் நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 108 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் 77 ரன்களும், கோலி 66 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ 124 ரன்களைக் குவித்தார். பென்ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 99 ரன்கள் எடுத்தார். இதனால் 43 புள்ளி 3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments