என்னது சசிகலா c.m ஆக இருந்தாங்களா? மிஸ்டேக் ஆர்.எஸ். பாரதி

0 4871
என்னது சசிகலா c.m ஆக இருந்தாங்களா? மிஸ்டேக் ஆர்.எஸ். பாரதி

திமுகவில் ஜெயலலிதாவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக இருந்ததை மறந்து, சசிகலா முதல் அமைச்சரானதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி கூறினார்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி ஆர். எஸ் பாரதி, திமுகவில் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார்.

அப்போது எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஆர்.எம் வீரப்பனா முதல் அமைச்சர் பத்விக்கு வந்தார், அவரது மனைவி ஜானகி தானே முதல் அமைச்சர் ஆனார் என்று சுட்டிக்காட்டிய அவர், அதன் பின்னர் கூட எம்.ஜி.ஆருடன் 25 படங்களில் நடித்த ஜெயலலிதாவும், அவருக்கு பின் சசிகலாவும் தானே அதிமுகவின் முதல் அமைச்சராக பொறுப்பு வகித்தனர் என தெரிவித்தார்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சர் ஆனதை மறந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் வாரிசுகள் இல்லை என்பதால் அவர்களது வாரிசுகள் பதவிக்கு வரவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சரானது ஒரு விபத்து என்றும் விமர்சித்தார்

அதே போல மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும் போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டது போல ஒரு சிலிண்டர் விலை 4500 ரூபாய்க்கு வந்து விடும் என்று தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments