ஜி.எஸ்.டி.யை ஏற்றுக் கொண்டதால் மேற்கு மண்டலத்தில் தொழில்கள் பாதிப்பு -மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக்கொண்டதால், மேற்கு மண்டலத்தில் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை விளக்கி அவர் பேசினார்.ஜி.எஸ்.டி. வரியை தமிழகம் ஏற்றுக் கொண்டதால் மேற்கு மண்டலத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
நெசவாளர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்கப்படும், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அதிகரிக்கப்படும், ஜவுளி ஆணையம் அமைக்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மேற்கு மண்டலத்திற்கு பல்வேறு திட்டங்களைக் கொடுத்ததாக ஸ்டாலின் பட்டியலிட்டார். தி.மு.க. ஆட்சியில்தான் சென்வாட் வரி ரத்து செய்யப்பட்டதாகவும், ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments