காதலிக்க பிராந்தி தருவாராம்..! ஒரு க்ராக் சுயேட்சை

0 3791

அந்தியூர் தொகுதியில் எம்.ஜி.ஆர் ரசிகர் எனக்கூறிக் கொண்டு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், 40 வருடமாக தன்னை தோற்கடிக்கும் தொகுதி வாக்களர்களை கவர்வதற்காக கேலிக்குறியவகையில் வாக்குறுதிகளை அள்ளிவிட்டார்...

அந்தியூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ள சுயேட்சை வேட்பாளர் சேக் தாவூத் என்பவர், தன்னை எம்.ஜி.ஆர் ரசிகர் எனக் கூறிக் கொண்டு, சீமானுக்கு டப்க் கொடுக்கும் வகையில் ஆளுங்கட்சியை கலாய்த்தார். அப்போது அவர், 40 ஆண்டுகளாக தான் பலமுறை தேர்தலில் போட்டியிட்ட போதும், தன்னை வெற்றிபெற வைக்காத வாக்காளர்களை நொந்து கொண்டார்.

நாட்டில் விவசாயிகள் என்ற பெயரில் சலுகை பெறுவோர் ஏமாற்றுவதாக குற்றஞ்சாட்டினார்.

பெண்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் தரப்படும் எனவும் செல்போன் இலவசமாக தரப்படும் என்று அடித்து விட்டார் அந்த சுயேட்சை.

தான் வெற்றிபெற்றால், பாண்டிச்சேரியில் இருந்து உடலுக்கு ஆரோக்கியத்தையும், இளமையையும் கூட்டும் ஒரிஜினல் மது வாங்கி வந்து 18 வயது இளைஞர்களுக்கு தருவேன் என்று கூறி அரசின் டாஸ்மாக் விற்பனையை கலாய்த்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments