பாலியல் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. விசாரணை குழு முன் ஆஜர்

0 1544
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிறப்பு டி.ஜி.பி., தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிறப்பு டி.ஜி.பி., தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறப்பு டி.ஜி.பி.யும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை புகார் கொடுக்கவிடாமல் தடுத்ததாக செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை குழு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தி, குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபி, தலைமை செயலகத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான விசாரணை குழு முன் ஆஜராகினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments