அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்கான தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
5 மாநில தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்கான தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசு சாரா தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தேர்தல் நேரத்தில் போலி நிறுவனங்களின் பெயரில் சட்டவிரோதமான முறையில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது, தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகரிக்கும் என குற்றம்சாட்டப் பட்டிருந்தது.
தேர்தல் பத்திரங்களை தடை செய்தால், பழைய முறையில் கணக்கில் வராத ரொக்கமாக நிதி அளிக்கும் முறை திரும்பிவிடும் என தேர்தல் ஆணைய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசியலில் கறுப்பு பண புழக்கத்தின் செல்வாக்கை தடுக்கவே தேர்தல் பத்திரங்கள் முறை கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதிப்பதற்கு இப்போது எந்த காரணமும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
Comments